கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
1.
முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகி விடு நீ – கலங்காதே
2.
கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா நீ – கலங்காதே
3.
காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – கலங்காதே
4.
உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீச
மலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)
மறைவாக இருக்காதே – கலங்காதே
5.
உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார் – கலங்காதே
6.
உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்- கலங்காதே